இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிடம்

முத்துப்பேட்டை, ஜன.28: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழை எளிய விவசாய கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த சுற்றுப்பகுதி 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் வசிக்கும் 273க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி 1962ம்ஆண்டு துவக்கப்பட்டது. இதில் படித்த பலர் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். சிறப்பான கல்வி சேவையுடன் இயங்கி வந்த இந்த பள்ளியில் சமீபகாலமாக ஆசிரியர்கள் பற்றாகுறையால் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் கல்விதரம் கேள்வி குறியாக மாறிவருகிறது. தற்பொழுது இதில் 8முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிடமாக உள்ளது. தற்பொழுது முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருமில்லை. அதேபோல் தொழிற்கல்வி, உடற்கல்வி, கணினி ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளது. இப்படி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தற்போதைய பள்ளி நிர்வாகம் போதிய கல்வியை இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்க முடிவதில்லை. இதனையறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி உயர; அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் காலியாக உள்ள பணியிடத்தை இதுநாள்வரை நிரப்ப வில்லை.

தற்பொழுது அரசு 8ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவித்துள்ள நிலையில் இதுநாள் வரை அதற்கான ஆயத்தப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் பள்ளி நிர்வாகம் உள்ளது. ஆசிரியர்கள் காலி பணிகளை நிரப்ப வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 1962ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு 1996ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு எட்டு முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் இருந்தும் ஒரு ஆசிரியர்கள் கூட தற்போது பணியில் இல்லை என்பது வேதனையான ஒரு விஷயம் ஆகும், ஆகவே கல்வித்துறை உயர்அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாற்று வழியிலாவது ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களின் கல்வி தரத்தையும் கல்வியையும் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

Related Stories: