நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

நாகர்கோவில், ஜன.28: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை மற்றும் யார்ன் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் 31ம் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சாலை பாதுகாப்பு குறித்த தண்டனைக்குரிய குற்றங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மொபைல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிவப்பு விளக்கு சைகைகளை மீறுதல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் செய்தல் மற்றும் அதிக பாரம் ஏற்றி சரக்கு வாகனம் இயக்குதல், தலைக்கவசம் அணியாமல் பைக்கில் செல்லுதல் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றங்கள் என்று தெரிவிக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் நாகர்கோவில் கோட்ட பொறியாளர் பாஸ்கரன் துண்டு பிரசுரம் விநியோகத்தை தொடங்கி வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் கீதா குமாரி, உதவி பொறியாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை போன்று மாவட்டத்தில் தக்கலை, குழித்துறை, தோவாளை உள்ளிட்ட இடங்களிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Related Stories: