புதுச்சத்திரம் வட்டாரத்தில் வயல் வெளி பள்ளி

சேந்தமங்கலம், டிச.4: புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் வயல்வெளி பள்ளி நடத்தப்பட்டது. புதுச்சத்திரம் வட்டாரம் கண்ணூர்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம், வேளாண்மை துறை மூலம் நீர்வள நிலவள திட்டத்தில் திருமணிமுத்தாறு உபவடிகால் பாசனப்பகுதிகளுக்கான விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி நடத்தப்பட்டது. இப்பயிற்சி வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ராஜகோபால் முன்னிலை வகித்தார்.  வேளாண்மை உதவி இயக்குநர் பேபிகலா தலைமை தாங்கினார். இதில் வேளாண் அறிவியல் நிலைய புஷ்பநாதன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பதின் அவசியம், மண் மாதிரி எடுக்கும் முறைகள், தரமான விதை தேர்வு முறைகள் குறித்து பேசினார். உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிலக்கடலை பயிருக்கு அடியுரம் இடும் முறை மற்றும் அளவுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மேலும் விவசாயிகளுக்கு மண்வள அட்டையின் பரிந்துரையின்படி உரமிட்டு உரச்செலவினை குறைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தரணியா, உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: