திருவட்டார் அருகே திருட்டு மது வியாபாரி கொலையில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

குலசேகரம், நவ.14:  திருவட்டார்  அடுத்த மேக்காமண்டபம், அம்போட்டுதலவிளை பகுதியை   சேர்ந்தவர் பொன் ஜெபசிங்  (40). திருட்டு மது வியாபாரி. இவரது மனைவி அனிதாகுமாரி. கடந்த  சில நாட்களுக்கு  முன்பு பொன்  ஜெபசிங் தலையில் படுகாயத்துடன்  வீட்டு முன்பு மயங்கி  கிடந்தார்.  உடனே  அவரை மீட்டு  ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன் ஜெபசிங்  இறந்தார். இது குறித்து திருவட்டார்  போலீசார் வழக்குப்பதிவு  விசாரணை நடத்தினர். ஏற்கனவே இது தொடர்பாக பொன்  ஜெபசிங் மனைவி அனிதா குமாரி  புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த   புகாரில், தங்களுக்கும் அதே பகுதியை  சேர்ந்த ஒருவருக்கும், சொத்து   தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இது  தொடர்பாக அடிக்கடி தகராறு  ஏற்பட்டு  வந்தது. இதனால் அவர் தான் தனது கணவரை  தாக்கி இருக்க வேண்டும்  என்று கூறியிருந்தார். இது தொடர்பாக  போலீசார் நடத்திய விசாரணையில்  சம்பவத்தன்று பொன்  ஜெபசிங்கிடம் மது வாங்க வந்த 2  பேர் அவரிடம் தகராறு  செய்து, அவரை கீழே தள்ளிய  தகவல் போலீசாருக்கு  கிடைத்திருந்தது. பின்னர்   இந்த வழக்கு கொலை வழக்காக  மாற்றப்பட்டது.

 இது குறித்து விசாரணை  நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படையினர்  சம்பவத்தன்று பொன்  ஜெபசிங்கிடம் மது வாங்க வந்த சிலரை பிடித்து விசாரணை  நடத்தினர். அப்போது   அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தான், சம்பவத்தன்று  பொன் ஜெபசிங்கை தாக்கியது என   உறுதி செய்யப்பட்டது.  இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில், பொன்   ஜெபசிங்கிடம் மது வாங்குவதற்கு வந்தது மேக்காமண்டபம் சியோன்மலை   பகுதியை சேர்ந்த மணிகண்டன்(26), வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் (22)    என்பது தெரியவந்து.  

இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த  நிலையில், 8  நாட்களுக்கு பிறகு நேற்று  முன்தினம் இவர்கள் சுவாமியார்மடம் பகுதியில்  பதுங்கி  இருப்பதாக திருவட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு  சென்று  இவரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து   இருவரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள், பொன் ஜெபசிங்கிடம்  ரூ.120 கொடுத்து 2 குவார்ட்டர்கள் கேட்டதாகவும், அவர் தர  மறுத்ததால்  ஆத்திரத்தில் கம்பியால் தாக்கி கீழே தள்ளிவிட்டு  தப்பி சென்றதாகவும்  கூறியுள்ளனர்.  இதையடுத்து இருவரையும் போலீசார்   தக்கலை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

Related Stories: