அஞ்சலகத்தில் காலாவதி ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

நாகர்கோவில், நவ. 14: குமரி மாவட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பல்வேறு வகையான காரணங்களால் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேலாக பிரீமிய தொகை செலுத்த இயலாமல் காலாவதியான பாலிசிகளை வருகிற ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் புதுப்பிக்க இயலாது. எனவே இத்தகைய காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கு ஏதுவாக இந்திய அஞ்சல் துறை ஒரு இறுதி நல்லவாய்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பாலிசிதாரர்கள் தங்களுடைய காலாவதியான பாலிசிகளை அதற்குரிய பிரிமியப்புத்தகம் மற்றும் உடல் நலத்திற்கான மருத்துவ சான்றுடன் அருகில் உள்ள தலைமை, துணை, கிளை அஞ்சலகத்தை அணுகி வருகிற டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக புதுப்பித்துக் கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய நல்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக 5 வருடத்திற்கு மேலாக பிரீமியத்தொகை செலுத்த இயலாமல் டிசம்பர் 31ம் தேதிக்குள் புதுப்பிக்கத் தவறிய காலாவதியான பாலிசிகள் அஞ்சலக விதிகளின் படி ரத்து  செய்யப் படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: