நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த விவசாயிகளுக்கான பட்டறிவு பயணம்

மேலூர், ஜூலை 24: வேளாண்மை தொழில்நுட்ப துறை சார்பில் மேலூரை சேர்ந்த விவசாயிகள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது.மேலூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொடர்பாக விவசாயிகள் பட்டறிவு பயணத்திற்கு மேலூர் விவசாயிகள் மதுரை மேற்கு வட்டாரம் மாரணிவாரியேந்தல் கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 5 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி பிரசன்னா வயலுக்கு விவசாயிகள் சென்றனர்.பட்டறிவு பயணத்தை மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி உத்தரவுப்படி அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் கீதா, உதவி தொழில் நுட்ப மேலாளர் மருதுபாண்டித்துரை ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: