மதுரை மாவட்டத்தில் 2.91 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

மதுரை, ஜூலை 23: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதனையடுத்து, “எமிஸ்” எண்ணுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) நடப்பாண்டில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆயிரத்து 553 பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 91 ஆயிரத்து 498 மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் தயாராகி வந்துள்ளன. அத்தகைய அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. இந்த அடையாள அட்டையில் மாணவர் மற்றும் தந்தை பெயர், எமிஸ் எண், தொடர்பு எண், முகவரி ஆகிய விவரங்கள் உள்ளன.

Related Stories: