செல்போன் பாதுகாப்பு கட்டணத்தில் முறைகேடு? மறுசுழற்சி இயந்திரம் அமைப்பு

அவனியாபுரம், மே 23: மதுரை விமானநிலையத்தில், காலி குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை விமானநிலையத்தில், பயணிகள் நீர் அருந்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை, அப்படியே குப்பைத் தொட்டியில் வீசுகின்றனர். அவைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவில்லை. மேலும், காலிப்பாட்டில்களை மீண்டும் நீர் நிறைத்து விற்பனையும் செய்து வந்தனர். இந்நிலையில், காலி குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சிக்கு உட்படுத்த விமானநிலையத்தில் மறுசுழற்சி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, காலிப்பாட்டில்கள் முறையற்ற வகையில் பயன்படுவதையும் தவிர்க்க முடியும். இதனால், விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: