தேனி மாவட்டத்தில் மது, கஞ்சா விற்பனை

தேனி, மே 23: தேனி அருகே உள்ள வீரபாண்டி மற்றும் சுற்றுக்கிராமங்களில் போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மது, கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி அருகே உள்ள வீரபாண்டி எஸ்.ஐ, மலரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனையில்் ஈடுபட்ட தப்புக்குண்டு நடுத்தெருவை சேர்ந்த முருகன்(52), அண்ணாநகரை சேர்ந்த ஜோதிராஜ்(41), லட்சுமிபுரம் கிருஷ்ணன்் கோயில் தெருவை சேர்ந்த செல்லச்சாமி(44), கூழையனூரை சேர்ந்த பார்வதி(65) ஆகியோரை கைது செய்தனர்.

கன்னியப்பபிள்ளைபட்டியில் மணிவேல்(45), ஓடைப்பட்டியில் முஜீப்(49) என்பவர்களும் கைது செய்யப்பட்டனர். தேனி அரண்மனைப்புதூரில் கீழப்பூலாநந்தபுரத்தை சேர்ந்த பிரபு(39) என்பவர் 1.5 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். இவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் முன்னரே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல்் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்். அனுமதியின்றி சட்டவிரோதமாக நடைபெறும் இந்த விற்பனையினை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: