கன்னியாகுமரி கடலில் தீவிர ரோந்து

கன்னியாகுமரி, மே 22: தமிழகத்தில்  முக்கிய விஐபிகள் வரும் போது தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல்  தடுக்கும் வகையில் கடலோர மாவட்டங்களில் சவ்காச் ஆப்பரேசன் என்ற பெயரில்  கடல் மற்றும் கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த வகையில்  தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்துள்ளார். இதையடுத்து  நேற்றுமுன்தினம் மாலை 6 மணி தொடங்கி இன்று காலை 6 மணி வரை சவ்காச் ஆப்பரேசன்  நடக்கிறது. குமரி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம்  இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள்  ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 மீனவ கிராமங்களில் பாதுகாப்பை  பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கூடன்குளம் பகுதியில் அதிநவீன ரோந்து  படகில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.இதன்படி கடலோர  பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகுகளில் கடலில் ரோந்து செல்வது,  கடற்கரை கிராமங்களில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள குழுமத்திற்கான  செக்போஸ்ட்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன தணிக்கை செய்வது,  வெளியாட்கள் யாராவது வந்தால் அவர்களை

தீவிரமாக கண்காணிப்பது, கடற்கரையில்  ரோந்து வாகனங்களில் ரோந்து செல்வது என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: