ரப்பர் கிலோ ₹140 ஆக விற்பனை

நாகர்கோவில், மே 22: ரப்பர் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத்தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ₹10 உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரப்பர் ₹140 ஆக விற்பனையாகியது. தமிழகத்தில் ரப்பர் சாகுபடி நடைபெறுகின்ற மாவட்டமாக குமரி மாவட்டம் இருந்து வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகம் வாயிலாக சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது.  கீரிப்பாறை, காளிகேசம், குற்றியாறு, மணலோடை, கோதையாறு, சிற்றாறு, மயிலாறு டிவிஷன்களில் அரசு ரப்பர் கழகம் அதிகம் ரப்பர் பயிரிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மாவட்டத்தில் ஒரு கிலோ ரப்பர் ₹240 வரை விலை உயர்ந்தது. ஆனால், அதன் பிறகு ரப்பர் விலை பெருமளவு உயரவில்லை. ஆனால் ரப்பர் விலையில் கடுமையாக சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு கிலோ ₹100 முதல் ₹150 என்ற வகையிலேயே ரப்பரின் விலை நீடித்தது. கடந்த 2017-18ம் ஆண்டில் சராசரி விலை ஆர்எஸ்எஸ் 4 கிரேடுக்கு ₹129.80 ஆக இருந்தது. ஆர்எஸ்எஸ் 5 கிரேடு ₹126.46 ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக ரப்பர் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இது ரப்பர் விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கோட்டயம், கொச்சி மார்க்கெட்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆர்எஸ்எஸ் கிரேடு 4 ரப்பர் கிலோ ₹130.50 ஆகவும், ஆர்எஸ்எஸ் கிரேடு 5 ரப்பர் கிலோ ₹128.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ‘நேற்று ஆர்எஸ்எஸ் கிரேடு 4 ஒரு கிலோ ரப்பர் ₹140 ஆக உயர்ந்தது. ஆர்எஸ்எஸ் 5 கிலோ ₹137 ஆக இருந்தது. ெதாடர்ந்து ரப்பர் விலை உயர்ந்து வருவது ரப்பர் விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: