பொள்ளாச்சி சம்பவம் கண்டித்து ஆர்ப்பாட்டம் கும்மிருட்டில் கப்பலூர் மேம்பாலம் வாகன சோதனையில் திணறும் தேர்தல் அதிகாரிகள்

திருமங்கலம், மார்ச் 15: கப்பலூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாமல் கும்மிருட்டு நிலவுவதால் தேர்தல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் திணறி வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு ரொக்கம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உள்ள 310 வாக்குச்சாவடி மையங்களையும் இணைத்து 3  பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று முன்தினம் முதல் வாகனசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நான்குவழிச்சாலை, கப்பலூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் கப்பலூர் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் ஹைமாஸ் விளக்குகள், உள்ளிட்ட எந்தவொரு மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் வாகனசோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் இரவில் ஆவணங்களை சரிபார்க்க முடியாமல் திணறிவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கப்பலூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கப்பலூர் மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததால் ஏற்கனவே இங்கு வாகன சோதனை நடத்தி வந்த போக்குவரத்து போலீசார் இருளில் சோதனை நடத்தமுடியாமல் இடத்தை மாற்றி சோதனை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: