தேர்தல் நடத்தை விதிமுறை அமல் அதிகாரிகள் கெடுபிடியால் பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை வியாபாரிகள் குற்றச்சாட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமல் அதிகாரிகள் கெடுபிடியால் பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை வியாபாரிகள் குற்றச்சாட்டு

திருவாரூர்,மார்ச்15: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அதிகாரிகள் கெடுபிடியால் பொருட்களை கொள்முதல் செய்ய முடிய வில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டுகின்றனர்.சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதி களை பல ஆண்டுகளுக்கு முன்பு வரையறுத்தது. அதன்படி தேர்தல் தேதி அறிவி க்கப்பட்ட பின் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்லப்பட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். அதன்படி, தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.அதன்படி விதிகளை மீறி பணம் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நாடுமுழுவதும் சோதனை சாவடிகள் அமை க்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகளும், ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென் றால் பறிமுதல் ஆகிவிடும் என்பதால் வியாபாரிகள் பொருட்களை கொள் முதல் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கடையில் கொள்முதல் செய்வதால் நாங்கள் கொள்முதலுக்கு தேவையான தொகையை ரொக்கமாக எடுத்து செல்ல வேண் டியுள்ளது. மாணவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம் உள்ளி ட்ட பொருட்களை கொள்முதல் செய்ய மதுரை செல்ல வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறையால் பணம் கொண்டு செல்ல முடிய வில்லை. குறைந்தது ரூ.2 லட்சம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தேர்தல் விதி முறைப்படி ஆவணங்களை தயார் செய்து கொண்டு செல்ல முடியாததால் அவதிப்படுகிறோம். எனவே தேர்தல் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கொண்டு செல்ல வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.பறிமுதல் கைவிடப்படுமா?தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை இன்று வரை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம், வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை மட்டும் பறிமுதல் செய்கின்றனர். வியாபாரிகளின் பணத்தை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: