திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர் கட்டுமான பணிகள் மும்முரம்

திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா அடுத்த ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில்  இந்த விழாவினையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற நிலையில் ஆழித்தேரோட்டம் என்பது அடுத்த மாதம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆழித்தேர் கட்டுமான பணி தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: