தமிழக மகளிர் இயக்கம் தீர்மானம் இந்திய தேசிய லீக் (எல்) திமுக கூட்டணிக்கு ஆதரவு

மதுரை, மார்ச் 14: மதுரையில் இந்திய தேசிய லீக் (எல்) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஹூசைன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஜமீன்தார், மாநில துணைத்தலைவர் ஹூமாயின் கபீர், மாநில அமைப்பு செயலாளர் சுல்தான் அலாவுதீன், மாநில செயலாளர் சையது முகமது கவுஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 2016 சட்டமன்றத்தேர்தலில் திமுகவை ஆதரித்ததுபோல், வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதை வரவேற்பது, சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என ராகுல்காந்தி உறுதியளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இளைஞரணி தலைவர் தமிமுன் அன்சாரி நன்றி கூறினார்.

Related Stories: