கஜா புயல் தாக்கி 86 நாட்களாகியும் சீரமைக்கப்படாத கொருக்கை அரசு கால்நடைபண்ணை

திருத்துறைப்பூண்டி, பிப்.13: கஜாபுயல் தாக்கி 86 நாட்களாகியும் சீரமைக்கப்படாத அரசு கால்நடை பண்ணையை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கால்நடை பண்ணை சுமார் 495 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

உம்பளச்சேரி பாரம்பரியஇன கால்நடைகள்உட்பட 491 கால்நடைகள் உள்ளது. இதில் கறவை மாடுகள் ஒரு இடத்திலும், வேறொரு இடத்தில் பால்வத்திய மாடுகளும் உள்ளன.

கஜா புயல் கால்நடை பண்ணையை புரட்டி போட்டது. அங்கிருந்து அனைத்து மரங்களும் சாய்ந்தது.கஜா புயல் அடித்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் பண்ணை சீரமைக்கப்படவில்லை. மரங்களும் அப்புறப் படுத்தப்படவில்லை. இரண்டு இடத்திலும் இரண்டு ஷெட்டுகள்அவசர தேவைக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சேதமடைந்த கட்டிடங்கள், ஷெட்டுகள்சீரமைக்கப்படவில்லை. மரங்களை அப்புறப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில் திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. கொருக்கை கால்நடைப்பண்ணையை சீரமைப்பதற்காக சுமார் ஒன்னரை கோடி திட்டமதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சமூகஆர்வலர் தெரிவித்தாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகஇயங்கி வரும் கொருக்கை அரசு கால்நடைப் பண்ணையில் பாரம்பரியம் மிக்க உம்பளச்சேரிஇன கால்நடைகள்உள்ளது. கஜா புயலில் தாக்கியதில் கறவை மாடுகள்உட்பட 12 மாடுகள் இறந்துள்ளது. தற்போது உள்ள 491 கால்நடைகளை பாதுகாக்க அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: