4 பேர் கைது: 3 லாரிகள் பறிமுதல் இடைத்தேர்தல் நடத்த துணிச்சல் இல்லை

மதுரை, பிப். 13: மதுரை ஒத்தக்கடையில் அமமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், ‘இடைத்தேர்தல் நடத்த இந்த அரசுக்கு துணிச்சல் இல்லை. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த   ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின் 33 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெல்ல மாட்டார்கள். இந்த ஆட்சி கவிழ்ந்ததும் அனைவரும் ஜெயிலுக்கு போகும் நிலை உருவாகும். அதிமுக- பாஜக கூட்டணி நிற்கும் இடங்களில் அமமுக எளிதில் வெற்றி பெறும். கஜா புயல் பாதிப்பை பார்க்க வராத பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தற்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வரும் திடீர் பாசம் ஏன்? அதிமுக ஓட்டு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.5 ஆயிரம் கொடுக்கலாமா என யோசிக்கிறது’’ என்றார். இதில் அம்மா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மகளிரணி செயலாளர் வளர்மதி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் பரமநாதன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சரவணன், மகேந்திரன், ஜெயபால், ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: