கீரங்குடியில் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை

கொள்ளிடம்,ஜன.18: கொள்ளிடம் அருகே கீரங்குடி மண் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடியிலிருந்து மாதிரவேளூர், பாலுரான்படுகை, வாடி, ஏத்தகுடி, சென்னியநல்லூர், பூங்குடி வழியாக  பனங்காட்டாங்குடி செல்லும் சாலை கீரங்குடியிலிருந்து மாதிரவேளூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி  வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த சாலையை இதுவரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாதிரவேளூரில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு செல்லும் மாண்வர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மழை பெய்து விட்டால் சாலையில் உள்ள களி மண்ணில் வழுக்கி கீழே விழுந்து அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் கீரங்குடியிலிருந்து பனங்காட்டாங்குடிக்கு செல்வோர்கள் அப்பகுதிக்கு வேறு சுற்றுப்பாதையை அதிக தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சாலையை மேம்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கீரங்குடியிலிருந்து மாதிரவேளூர் வரை உள்ள 2 கிலோ மீட்டட் தூர மண் சாலையை  மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: