கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500லி. மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை, ஜன.11: குமரிமாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ரதன்ராஜ்குமார், டிரைவர் டேவிட் ஆகியோர் நேற்று அதிகாலை இனயம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியாக வந்த சொகுசு காரை சைகை காண்பித்து நிறுத்த முயன்றனர்.ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதிகாரிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று உண்ணாமலைக்கடை பகுதியில் மடக்கிபிடித்தனர். அப்போது டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். உடனே அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 1500 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து கார் மற்றும் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணெயை இனயத்தில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அதுபோல் காரை கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: