நாகர்கோவிலில் இந்து மகாசபா தர்ணா போராட்டம்

நாகர்கோவில், டிச. 7: அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைக்க, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமநாதபுரத்தில் கோயில் அமைக்கவும், தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடத்த சட்டம் இயற்றியதுபோல் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு பாராளுமன்றத்திலும், உத்தரபிரதேச சட்டமன்றத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி அகில பாரத இந்து மகா சபா சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று காலை தர்ணா போராட்டம் நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்ராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவகுமார் வரவேற்றார். மாநில தலைவரும் தேசிய துணை தலைவருமான தா.பாலசுப்பிரமணியன் தர்ணா போராட்டம் குறித்து பேசினார். தர்ணா போராட்டத்தில்  கிழக்கு மாவட்ட பிரசார அணி தலைவர் பாலசுப்பிரமணியம், இந்து மகாசபா விவசாய அணி தலைவர் செல்லையா, கோட்ட செயலாளர் ராஜேஷ், நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: