வாத்தியார்விளை மன் நாராயணசுவாமி கோயில் திருஏடு வாசிப்பு

நாகர்கோவில், டிச.7: வாத்தி யார்விளை மன் நாராயணசுவாமி கோயில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 23ம் தேதி (ஞாயிற்றுக்கிமை) வரை நடை பெறுகிறது. விழாவில் தினமும் காலை 6 மணி. இரவு 9 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறும். 21ம் தேதி(வெள்ளிக்கிழை) திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு அய்யாவின் அன்புக்குடி மக்கள் அனைவரும் திருவிளக்கு நியமித்தல் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு உண்பான் நியமிக்கப்படுகிறது. 9 மணிக்கு சுருள் வைத்து வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

23ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு பணிவிடை, மாலை 3 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும் நடை பெறுகிறது. தொடர்ந்து அய்யாவுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை வாத்தியார்விளை ஊர் மன் நாராயணசுவாமி  கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Related Stories: