திருமக்கோட்டையில் மின்சாரம், குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

மன்னார்குடி, டிச. 6: கோட்டூர் அடுத்த திருமக்கோட்டையில் மின்சாரம், குடிநீர் கேட்டு மகாராஜ புரம் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள மகாராஜ புரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் கடந்த 15 ம் தேதி வீசிய கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. திருமக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மகாராஜபுரம் கிராமத்தில்  சுமார் 1200 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 15 ம் தேதி முதல் நேற்று வரை புயலின் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. இத னால் குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டது. மின்சாரம் மற்றும் குடிநீர் இல் லாமல் கிராம மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து

வேதனையில் தவித் தனர்.

இந்நிலையில் புயல் கடந்து 20 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் பிரச் சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தக்கோரியும், சேதமடைந்த அனைத்து வீடுகள், தென்னை மரங்கள், சம்பா பயிர்கள் ஆகியவற்றிக்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஜபுரம் கிராம மக்கள் திருமக்கோட்டையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் மற்றும் பெண்கள்  காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு  மன்னார்குடி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி, விஏஓ, மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 2 நாட்களில் நிலை மை சீரடையும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் உடனடியாக டேங்கர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய படும் எனவும் கூறியதை அடுத்து பொது மக்கள்  கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: