சார்பு நீதிபதி அறிவுறுத்தல் குழந்தைகள் தினவிழா சித்தேரியில் 1,000 பனை விதை நட்டு கொண்டாட்டம்

அரியலூர்,நவ.15: அரியலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட பசுமை படை சார்பில் பனை விதை நடும் விழா அரியலூர் சித்தேரியில் நேற்று நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம், வறண்ட மாவட்டமானது., இதனையடுத்து பனைமரம் நிலத்தடி நீரை தக்கவைத்து கொள்வதால் அதிக அளவு பனை விதைகளை நட்டு அரியலூர் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்க்காக முதன் முதலில் குழந்தைகள் தினமான நேற்று பனைவிதையை பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளால் நட்டு வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பனை விதையை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி தலைமையில் பனை மரங்கள் காப்பாற்றும் முயற்சியாக   அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாதிரிப்பள்ளி, கல்லகுடி நடுநிலைப்பள்ளி, தூய மேரி உயர்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஏரிக்கரையின் இரு புறங்களிலும் விதைகளை நட்டனர். பனை விதைகளை பாளையப்பாடி அக்னி சிறகுகள் அமைப்பினர் வழங்கினர்.  

Related Stories: