கீழப்பெரம்பலூர் முருகன் கோயிலில் அன்னப்படையல் விழா

குன்னம், மே 10: கீழப்பெரம்பலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற அன்னப்படையல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப் பெரம்பலூர் ஊராட்சியில் இருந்துவரும் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அன் னப்படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமி வீதியுலா மற்றும் தெருக்கூத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் காலை பிச்சாண்டவர் சாமிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனை செய்து, சாமி வீதியுலா மற்றும் சிறு தொண்டநாயன்மார்கள் நாடகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னப்படையல் வழங்கப்பட்டது.தொடர்ந்து, வாணவேடிக்கை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் வயலூர், வேள்விமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கீழப்பெரம்பலூர் முருகன் கோயிலில் அன்னப்படையல் விழா appeared first on Dinakaran.

Related Stories: