கன்னியாகுமரியில் 55 பஞ்சாயத்து பணியாளர்களுக்கு பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

கன்னியாகுமரி, நவ.15: கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிகாய்ச்சல்,டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன்ஒருபகுதியாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவில் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 55 டவுண் பஞ்சாயத்தில் உள்ள பரப்புரையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரியி பஞ்.முன்பு இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி விவேகானந்தா கேந்திராவில் நிறைவடைந்தது.

பின்னர் தொடங்கிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பில் மாவட்ட சுகாதாரத்துறை துணைஇயக்குனர் டாக்டர் மதுசூதனன், பேருராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, திறந்த வெளியில் மலம் களிப்பதால் ஏற்படும் சுகாதார கேடு மற்றும் வீட்டின் சுற்றுபுறங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கினர் . மேலும் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அரசுக்கு உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில்செயற்பொறியாளர்மாடசாமி சுந்தர்,கன்னியாகுமரிசெயல்அலுவலர்வெங்கடேசன்,சுகாதாரஅதிகாரிமுருகன்,பஞ்.இளநிலைஉதவியாளர்சண்முகசுந்தரம்ஆகியோர்கலந்துகொண்டனர்.பயிற்சிமுகாமில் 55 பஞ்.களைசேர்ந்த 200க்கும்மேற்பட்டபரப்புரையாளர்கள்,செவிலியர்கள்கலந்துகொண்டனர்.

Related Stories: