திருவாரூரில் பணி நிரந்தரம் கோரி முற்றுகை மிவா ஊழியர்கள் 250 பேர் கைது

திருவாரூர்,நவ.14: ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்கத்தினர் 250 பேரை போலீசார் கைது செய்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் முத்தரப்பு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ 380 வழங்கிட வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சி.ஐ.டி.யு சார்புடைய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் துர்கா சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திட்ட தலைவர் சகாயராஜ், திட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்ட செயலாளர்கள் வீரபாண்டியன், தமிழரசன் மற்றும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகையன், துணை செயலாளர் பழனிவேல் உட்பட 250 பேரை டவுன் போலீசார் கைது செய்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: