இலவச பயிற்சி விண்ணப்பதேதி நீட்டிப்பு

நாகர்கோவில், நவ. 14:  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதலான சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு இலவசப் பயிற்சிக்கான விண்ணப்ப தேதி நவம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற 25ம் தேதி நடத்தப்படுகிறது. இது தொடர்பான இதர விபரங்கள் www.mkuniversity.org.in எனும் இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: