தேனியில் கலைப்போட்டிகள்

தேனி, நவ. 1: தேனி வைகை அரிமா சங்கம் மற்றும் தேனி அபிநயா பரதநாட்டிய இசைப்பள்ளி சேர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், குரலிசை போட்டிகளை தேனியில் நடத்தியது. இப்போட்டிகளை மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் டேவிட் துவக்கி வைத்தார். இதில் 86 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பரதநாட்டியம், குச்சிப்புடி, கரகாட்டம், வெஸ்டர்ன் டான்ஸ் என பல்வேறு நடனங்களை ஆடினர். இப்போட்டியில் மதுரை தமிழ்நாடு இசைக்கல்லூரியின் விரிவுரையாளர் ஜாஸ்மின்வின்சென்ட், வெங்கடேஷ்வரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாலையில் படியுங்கள் மாணவ, மாணவியர் பங்கேற்பு

Related Stories: