அரியலூர் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பில்லை மக்கள் பீதியடைய வேண்டாம் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர், அக். 25: அரியலூர் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பில்லை. இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கலெக்டர் விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 19 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு யாருக்கும் டெங்கு காய்ச்சல் கிடையாது.

சாதhரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு டாக்டர் உட்பட 3 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 3 பேர் மட்டுமே பன்றி காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களும் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளனர்.

எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

Related Stories: