சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர் சத்யாகிரக போராட்டம்

கன்னியாகுமரி, அக்.17:  மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்(78). 1963ல் இருந்து தொடர்ந்து 55 ஆண்டுகளாக ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தொடர் நடைபயணமாக சபரிமலை சென்று வருகிறார்.  பல ஆண்டுகளாக குருசாமியாகவும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்ல வழிகாட்டியாகவும் உள்ளார். சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு சத்திய சீலன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.  இந்த நிலையில்  நேற்று காலை கன்னியாகுமரி டவுண்டானா சந்திப்பில் காலவரையற்ற சத்யாகிரக போராட்டம் தொடங்கி உள்ளார். போராட்டத்தை பாஜ மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.  

சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சத்யாகிரகம் நடத்தி வரும் சத்தியசீலனை வக்கீல் ராஜேஷ், கன்னியாகுமரி சிவசேனா நகர தலைவர் சுபாஷ், பாஜ அகஸ்தீஸ்வரம் மண்டல பொதுச்செயலாளர் கோபி, கன்னியாகுமரி மண்டல தலைவர் சுடலைமணி உட்பட  பலர் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

Related Stories: