கிருஷ்ணன்கோவில் சானல் ஆக்ரமிப்பால் வீடுகளுக்குள் வெள்ளம்: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்க வில்லை

நாகர்கோவில், அக்.17:  நாகர்கோவில் நகரில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை இருந்தது. இந்த மழை காரணமாக  பல்வேறு இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. நாகர்கோவில் கணியான்குளம் ஊராட்சிக்குட்பட்ட ரயில்வே நகர் பகுதியில் கிருஷ்ணன்கோவில் சானல் செல்கிறது. இந்த சானல் தற்போது ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சானல் இருப்பது தெரியாமல் கட்டிடங்கள் உருவாகி உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை பெய்த மழையால் பள்ளிவிளை பகுதியில் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்தது. இதில்  ரயில்வே நகர் பி பிளாக் 4 வது தெரு, 3 வது தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

கிருஷ்ணன்கோவில் சானலை பலர் ஆக்ரமித்து வீடுகளும், கட்டிடங்களும் கட்டி உள்ளனர். பொதுப்பணித்துறையினர் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். சானல் ஆக்ரமிப்பு காரணமாகவே தண்ணீர் வீடுகளுக்குள் வருகிறது. சாலையும் சேதம் அடைகிறது. நீர் நிலை ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே கலெக்டர் கிருஷ்ணன்கோவில் சானலில் உள்ள ஆக்ரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: