மாடத்தட்டுவிளை அன்னை ஞானம்மா கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திங்கள்சந்தை, அக். 16: மாடத்தட்டுவிளை அன்னை ஞானம்மா கத்தோலிக்க கல்வியியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

புனித செஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை சேர்மன் அருட்பணி ஜி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி விமலா தூயா மேரி அறிக்கை வாசித்தார். சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.தங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் துறை பயிலும் மாணவ ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கினார். அதற்கான சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். 39 மாணவ ஆசிரியைகளுக்கு பட்டமளிக்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவ ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர்.

முளகுமூடு பங்குத்தந்தை கடாட்சதாஸ், மாடத்தட்டுவிளை ஊர் துணைத்தலைவர் பயஸ்சேவியர் மற்றும் மாணவ ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புனித செஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் சேர்மன் அருட்பணி ஜி.ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி விமலா தூயா மேரி, துணைத்தலைவர் தங்கமரியான், செயலாளர் முனைவர் ஆன்றோ, இணைச் செயலாளர் ஆல்பின்சன், பொருளாளர் ஆன்றனின் செல்லி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: