நெடுஞ்சாலைத்துறை மெத்தனம் ஆசிரியரை கைதட்டி வரவேற்றால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

முத்துப்பேட்டை, அக்.11: ஆசிரியரை கைதட்டி வரவேற்றால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும் என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் கோவிலூர் அரசு பள்ளி முன்னாள் மாணவி பேசினார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட தலைவர் மெட்ரோ மாலிக் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவி சிவபாலா பேசுகையில்: மாணவிகளுக்கு தினந்தோறும் புத்துணர்ச்சி அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் என்பது அவசியம். அதற்கு ஈசியான வழி என்னவென்றால் சிரிப்பளையுடன் கை தட்டுதல், இதனை தினந்தோறும் மாணவிகள் கடைபிடிக்க வேண்டும். அதனால் தினந்தோறும் வகுப்பறைக்கு உங்களின் ஆசிரியை வரும்போது அவரை வரவேற்கும் விதமாக கைதட்டி வரவேற்றால் ஆசிரியைக்கு சிறப்பு செய்ததுபோல் இருக்கும் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படும் என்றார்.

அதேபோல் மாணவிகள் உடல் தூய்மையாக இருப்பது, ஈசியாக தற்காப்பு கலையை கடைபிடிப்பது, பாலியல் சீண்டுதலிலிருந்து தப்பிக்க என்னவழி குறித்து பல்வேறு செயல்முறைகளை சென்னை அருள்மொழி ராமநாதன், இளைஞர் சேவை இயக்குநர் பொன்னம்மாள், கிராண்ட் இயக்குநர் உமா ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். இதில் ரோட்டரி சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஜாம்பை கல்யாணம், முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, வேதசங்கர், நிர்வாகி ராஜேஷ், பள்ளியின் இன்டராக்ட் ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலெட்சுமி, ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் இலக்கிய  மற்றும் ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Related Stories: