திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி, அக்.11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நகர பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் டெங்கு பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகின்ற இடங்களை கண்டறிந்து அழித்தல் பணி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர். நகரப்பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் திருமண மண்டப கட்டிடங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர். நகராட்சி சார்பில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939 பிரிவுகளின்படி முன்னறிவிப்பு நோட்டீஸ் நகர பகுதியில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்கள்,

வணிக வளாகங்கள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாக ஏதுவாக மழை நீரை தேக்கி வைத்திருந்தாலோ, உடைந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் போட்டு வைத்திருந்தாலோ திருவாரூர் மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய அபராதம் விதிக்கப்படும். மேலும், வழக்கும் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி ஆணையர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: