அறந்தாங்கியில் போலீசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.11:  அறந்தாங்கியில் போலீசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தா. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் கவிவர்மன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா ஆகியோர் பேசினர்.

தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். அறந்தாங்கி போலீசாரின் செயல்பாடுகள் மற்றும் காவலர்கள் பற்றாக்குறையால், தாலுகா முழுதும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. தவறான வகையில் மாமூல் வசூல் செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கி, நாகுடி காவல்நிலையங்களுக்கு உதவி ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: