மனைவியின் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு ராணிப்பேட்டை மாட்டு வியாபாரி கொலை வழக்கில்

வாலாஜா, அக்.5: ராணிப்பேட்டை மாட்டு வியாபாரி கொலை வழக்கில் அவரது மனைவியின் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு ெசய்துள்ளனர். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சாமி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ஆஷிப் அக்பர்(31), மாட்டு வியாபாரி. இவர் கடந்த மாதம் 7ம் தேதி வாலாஜா பை-பாஸ் சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் வாலாஜா அடுத்த பாகவெளியை சேர்ந்த விவேக்(23) என்பவர் கடந்த 2ம் தேதி போலீசில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் ஆஷிப்அக்பர் மனைவி ரிகானா பேகத்திடம்(27) விசாரித்தனர். அதில், கள்ளக்காதலன் காலித்அகமதுவுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கணவரை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து ரிகானாபேகம், கூலிப்படையை சேர்ந்த விவேக், கிருபாகர், லோகு, சதீஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், தலைமறைவான கள்ளக்காதலன் காலித் அகமது மற்றும் வாலாஜாவை சேர்ந்த சின்னக்குட்டி, ராஜ் ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கோர்ட்டில் காலித் அகமது நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். காலித் அகமதுவை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வாலாஜா போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: