அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு புதிய தாசில்தார்

நாகர்கோவில், செப்.19: அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய பெண் உதவியாளர் ஒருவர் தாசில்தார் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு, விசாகா கமிட்டி விசாரணை நிறைவில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய தாசில்தார் உள்ளிட்ட ஒட்டு மொத்த அலுவலர்களையும் இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டிருந்தார். இதில் அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக பணியாற்றிய சஜித், கல்குளம் தாசில்தாராக புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். கல்குளம் தாசில்தார் ராஜா, அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். ஆனால் ராஜா புதிய பணியிடத்தில் சேரவில்லை. உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் பணியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அகஸ்தீஸ்வரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகநயினாருக்கு அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விளவங்கோடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அனில்குமார் அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அகஸ்தீஸ்வரம் தாலுகா தேர்தல் பிரிவு தாசில்தாராக பணியாற்றி வந்த சேகர், தாசில்தாராக பதவி உயர்வு செய்யப்பட்டு டாஸ்மாக் மேலாளராகவும், கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை தாசில்தாராக பணியாற்றி வந்த பிளாரன்ஸ் நிர்மலா பதவி உயர்வு வழங்கப்பட்டு விளவங்கோடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: