தாசில்தாரை கண்டு ஓட்டம் மணல் திருடர்களுக்கு வலை

போடி, செப்.7: போடியில் தாசில்தாரை கண்டதும் ஓடிய மணல் கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போடி புறநகர் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி புறநகர் போலீசார் திடீர் ரோந்து சென்றனர். அப்போது சிலமலை அருகிலுள்ள மணியம்பட்டி ஓடையில் டிராக்டரில் ஒருவர் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், போடி மணியம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் முத்துப்பாண்டி(38) என தெரிந்தது. அவரை கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராமகிருஷ்ணாபுரம் நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள அம்பரப்பர் மலை அடிவார ஓடையில் 2 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். மணல் அள்ளிய ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஊத்தாம்பாறையை(25) கைது செய்தனர். 2 டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய டி.புதுக்கோட்டையை சேர்ந்த சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

போடி தாசில்தார் ஆர்த்தி ஆய்வுக்கு சென்றபோது, மயான பகுதி கொட்டகுடி ஆற்றிலிருந்து வாகனத்தில் மணலை மூடைகளாக அடுக்கி சிலர் திருடி வந்தனர். தாசில்தாரை கண்டவுடன் வாகனத்தைவிட்டு அதில் இருந்த 8 பேர் தப்பி ஓடிவிட்டனர். வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரத்து வருகின்றனர். அடுத்தடுத்து மணல் திருடர்கள் கைது செய்யப்பட்டது போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: