திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி தரும். கொரோனா வைரஸ் காரணமாக கிரிவலம் செல்வதற்கு மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (1ம் தேதி) அதிகாலை 1.10 மணிக்கு தொடங்கி, 2ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு நிறைவடைகிறது. ஆனால், 7-வது மாதமாக நாளையும் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். எனவே, தடையுத்தரவை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை கண்காணிக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: