பா.ஜ.க., அ.தி.மு.க. உள்பட 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு 143 சதவீதம் அதிகரிப்பு

டெல்லி : தொடர்ந்து எம்பியாக இருப்பவர்களின் சொத்துக்கள் பல மடங்கு உயர்ந்து இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

*இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்பியாக இருக்கும் முகமது பஷீரின் சொத்து 2081% உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு ரூ.6,05,855 ஆக இருந்தது. 2014ம் ஆண்டில் பஷீரின் சொத்து மதிப்பு ரூ.1,32,16,259 ஆக உயர்ந்தது.

*இவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சிசிர் குமார் அதிகாரியின் சொத்து மதிப்பு 1,700% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இவரின் சொத்து மதிப்பு ரூ.10,83,159 ஆக இருந்த நிலையில், 2014ம் ஆண்டின் படி ரூ. 1,94,98,381 ஆக உயர்ந்துள்ளது.

*திருவள்ளூர் தொகுதி அதிமுக எம்பியான வேணுகோபாலின் சொத்து மதிப்பு 1,281% அதிகரித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ரூ.20,74,236 ஆக இருந்த வேணுகோபாலின் சொத்து மதிப்பு 2014ம் ஆண்டின் படி ரூ.2,98,43,502 ஆக உயர்ந்தது.

*அ.தி.மு.க.  எம்.பி. தம்பிதுரையின் சொத்து மதிப்பு 41 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து தேர்வான தம்பிதுரை தாக்கல் செய்தபோது, அவரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு அது ரூ.13 கோடியாக அதிகரித்தது.

*பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 21 கட்சிகளை சேர்ந்த 153 எம்.பி.க்களின் சராசரி சொத்துமதிப்பு 142% உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ரூ.5.5 கோடியாக இருந்த சராசரி சொத்துக்களின் மதிப்பு 2014ம் ஆண்டு ரூ.13,32 கோடியாக உயர்ந்து இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துளளது.

*இதனிடையே குஜராத்தில் உள்ள 9 பாரதிய ஜனதா எம்பிக்களின் சராசரி சொத்துமதிப்பு 186.47% உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ரூ.7.06 கோடியாக இருந்த சராசரி சொத்து மதிப்பு 2014ம் ஆண்டு ரூ.10.85 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: