டிக்கெட் புக்கிங் வெப்சைட்டில் 1.80 கோடி பாஸ்வேர்ட் திருட்டு

பெங்களூரு:  இக்சிகோ இணையதளத்தின் வாடிக்கையாளர்கள் 1.80 கோடி பேரின் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமை தலையிடமாக கொண்டு டிராவல் மற்றும் ஓட்டல் அறை முன்பதிவு இணையதள நிறுவனமான இக்சிகோ இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்ஸ்சில் ரயில், பஸ், விமானம், ஓட்டல் முன்பதிவு வசதி உள்ளது.  இந்த இணையதளத்தில் சுமார் 10 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சராசரியாக 2 கோடி ஒவ்வொரு மாதமும் இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த இணையதளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேரின் விவரங்களை ஹேக்கர்ஸ் திருடி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. இந்த செய்தியை இங்கிலாந்தின் இணையதளமான தி ரிஜிஸ்டர் அம்பலப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் திருடப்பட்டுள்ளதாக இக்சிகோ நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தங்கள் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைவரும் தங்கள் பாஸ்வோர்டை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.  இது குறித்து இக்சிகோ நிறுவனத்தின் தலைவர் அலோக் பாஜ்பாய் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். எங்கள் இணையதளத்தில் பதிவு செய்பவர்களின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் விவரங்களை நாங்கள் சேமித்து வைப்பதில்லை. திருடப்பட்ட விவரங்களில் இமெயில் முகவரி தவிர மறைக்கப்பட்ட பாஸ்வோர்ட் அடக்கம். மறைக்கப்பட்ட பாஸ்வோர்ட் என்பதால் அதை யாரும் பயன்படுத்த முடியாது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: