நூதன முறையில் கடத்தல் 11 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் 7 பேர் பிடிபட்டனர்

சென்னை: நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 7 பேரை கைது செய்தனர்.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில், சுற்றுலா விசாவில் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  சீனிவாசன் (37) என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால்,  அவர் வைத்திருந்த மின்சார மோட்டாரை அதிகாரிகள் கழற்றி பார்த்தபோது அதன் உள்பகுதியில் 5 தங்கக் கட்டிகள் மறைத்து கடத்தி வரப்பட்டது  தெரியவந்தது. அதன் மொத்த எடை 600 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ₹20 லட்சம். இதையடுத்து சீனிவாசனை கைது செய்தனர்.இதுபோல், கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு வந்த மற்றொரு விமானத்தில், சென்னையை சேர்ந்த உஸ்மான் (37), அபுபக்கர் (30) ஆகியோர் சுற்றுலா விசாவில் சென்னைக்கு  வந்திருந்தனர். அவர்களது உடமைகளை சோதனையிட்டபோது, சூட்கேஸின் கைப்பிடியை இணைத்திருக்கும் இரும்பு ராடுக்குள் 2 தங்க கம்பிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச  மதிப்பு ₹10 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.அதேபோல் நேற்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த காசிம் (31) என்பவரை சோதனையிட்டபோது, ஆசனவாய்க்குள் 400 கிராம் எடை கொண்ட தங்க துண்டுகள்  இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹12 லட்சம். காசிமை கைது செய்தனர்.

*  மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில் வீடியோ கேம் விளையாடும் ஜாய் ஸ்டிக்கில் தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த கமர்அலியை (38) கைது செய்தனர். அவரிடம் இருந்த ஜாய்  ஸ்டிக்குகளில் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன்  மொத்த எடை 3.14 கிலோ. அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் சென்னையை சேர்ந்த இப்ராகிம் ஷா (52), ரியாஸ்கான் (34) ஆகியோரிடம் 249 ஜாய் ஸ்டிக்குகளில் இருந்து 6.66 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். மொத்தம் இவர்கள் 3 பேரிடம் இருந்து 9.8 கிலோ  தங்கம் கை பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ₹3.3 கோடியாகும். இதனை தொடர்ந்து 3 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். சென்னை, ஜன. 21: நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை  அதிகாரிகள் பறிமுதல் செய்து, 7 பேரை கைது செய்தனர்.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில், சுற்றுலா விசாவில் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  சீனிவாசன் (37) என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால்,  அவர் வைத்திருந்த மின்சார மோட்டாரை அதிகாரிகள் கழற்றி பார்த்தபோது அதன் உள்பகுதியில் 5 தங்கக் கட்டிகள் மறைத்து கடத்தி வரப்பட்டது  தெரியவந்தது. அதன் மொத்த எடை 600 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ₹20 லட்சம். இதையடுத்து சீனிவாசனை கைது செய்தனர்.இதுபோல், கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு வந்த மற்றொரு விமானத்தில், சென்னையை சேர்ந்த உஸ்மான் (37), அபுபக்கர் (30) ஆகியோர் சுற்றுலா விசாவில் சென்னைக்கு  வந்திருந்தனர். அவர்களது உடமைகளை சோதனையிட்டபோது, சூட்கேஸின் கைப்பிடியை இணைத்திருக்கும் இரும்பு ராடுக்குள் 2 தங்க கம்பிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச  மதிப்பு ₹10 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.அதேபோல் நேற்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த காசிம் (31) என்பவரை சோதனையிட்டபோது, ஆசனவாய்க்குள் 400 கிராம் எடை கொண்ட தங்க துண்டுகள்  இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹12 லட்சம். காசிமை கைது செய்தனர்.

*  மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில் வீடியோ கேம் விளையாடும் ஜாய் ஸ்டிக்கில் தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த கமர்அலியை (38) கைது செய்தனர். அவரிடம் இருந்த ஜாய்  ஸ்டிக்குகளில் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன்  மொத்த எடை 3.14 கிலோ. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சென்னையை சேர்ந்த இப்ராகிம் ஷா (52), ரியாஸ்கான் (34) ஆகியோரிடம் 249 ஜாய் ஸ்டிக்குகளில் இருந்து 6.66 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். மொத்தம் இவர்கள் 3 பேரிடம் இருந்து 9.8 கிலோ  தங்கம் கை பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ₹3.3 கோடியாகும். இதனை தொடர்ந்து 3 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: