சோமாஸ்

எண்ணி 36 நாள்ல தீபாவளி வரப்போகுது... முன்னாடி எல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்பே, பலகாரங்களை பிளான் பண்ணி வீட்ல ரெடி பண்ண  ஆரம்பிச்சுருவாங்க... இப்ப டிரெண்ட் மாறினாலும், வீட்ல பலகாரம் செய்றவங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காக சுவைமிகு  செட்டிநாடு பலகாரங்கள் தீபாவளி வரை வாரந்தோறும் ஸ்பெஷலாக வருகிறது. இப்ப டீசர் மாதிரி டிைரயலா செஞ்சு பாருங்க... மெயின் பிக்சரை தீபாவளி  நெருங்கும்போது பார்த்துக்கலாம். தீபாவளின்னா முறுக்கு, அதிரசம் மெயின் பலகாரமாக இருக்கும். அதுக்கு அடுத்தபடியாக சோமாஸ் பலகாரமும் முக்கியமானதுதான்... செஞ்சு  பார்க்கலாமா?

செய்முறை

மைதா மாவுடன் சிறிதளவு உப்பு, சர்க்கரை 1 ஸ்பூன் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ந்து பிசைந்து கொள்ளவும். இதனை 2 மணி நேரம் ஊற விடவும். தேங்காயை  துருவி வாணலியில் நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும். முந்திரிப்பருப்பு, கசகசாவை தனித்தனியாக நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை,  சர்க்கரை இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளவும். அவற்றில் வறுத்த கசகசா, முந்திரி, ஏலக்காய், தேங்காய் போட்டு நன்றாக கலந்து  எடுத்துக் கொள்ளவும். மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய பூரியாக செய்து பூரணத்தை வைத்து மடக்கி, சோமாஸ் கரண்டியால் வெட்டி பின்  எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மெல்லிய காரம், இனிப்பு கலந்த சுவையுடன் சோமாஸ் ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: