₹3.10 கோடி மோசடி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் : ராஜேந்திர பாலாஜி வக்கீல்கள் மூலம் கடிதம்

விருதுநகர் : ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ₹3.10 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்நாடகா மாநிலம், ஹாசனில் காரில் சென்றபோது தனிப்படை போலீசாரால் கடந்த 5ம் தேதி கைதானார். பின்னர் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாஸ்போர்ட்டை திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யப்பட்ட எல்லையை தாண்டி பயணிக்கக் கூடாது. விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை ஏற்க வேண்டும் என நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட் விதித்தது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார்.நேற்று அவரது வக்கீல்கள் 10 பேர், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் எஸ்பி மனோகரிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் கடிதம் அளித்தனர். அதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சொந்த ஊரான திருத்தங்கலில் தங்கி இருப்பதாகவும், வேறு எங்கும் செல்ல மாட்டேன். விசாரணைக்கு சம்மன் அனுப்பினால் ஆஜராகி ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறினர்….

The post ₹3.10 கோடி மோசடி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் : ராஜேந்திர பாலாஜி வக்கீல்கள் மூலம் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: