ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து: லாரென் டவுன் அதிரடி

குயின்ஸ்டவுன்: இந்திய மகளிர் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசிலாந்து 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியிலும் வென்ற நியூசி. 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி நேற்று நடந்தது.டாஸ் வென்ற நியூசி. முதலில் பந்துவீச, இந்திய அணி தொடக்க வீராங்கனைகள் மேகனா – ஷபாலி முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். மேகனா 61 ரன் (41 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஷபாலி 51 ரன்னில் (57 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த யாஷ்டிகா 19, கேப்டன் மிதாலி 23 ரன்னில் பெவிலியன் திரும்பினர். தீப்தி சர்மா ஒரு முனையில் சிறப்பாக விளையாட, கேப்டன் ஹர்மன்பிரீத் உள்பட மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.இந்தியா  49.3 ஓவரில் 279 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தீப்தி  69 ரன்னுடன் (69 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய நியூசி. அணிக்கு கேப்டன் ஷோபி (0),  சூசி (5) அதிர்ச்சி தொடக்கத்தை கொடுத்தாலும், அடுத்து வந்த அமிலியா 67, அமி 59, கிரீன் 34, கேத்தி 35 ரன் விளாசினர். நியூசிலாந்து 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 280 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது.லாரென் டவுன் 64 ரன் (52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), மெக்கே 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் ஜுலன் 3 விக்கெட் எடுத்தார். நியூசி. 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. 4வது போட்டி  பிப்.22ம் தேதி நடைபெற உள்ளது….

The post ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து: லாரென் டவுன் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: