ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி : 14-12-2021

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, டிசம்பர் 14ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.ஸ்ரீரங்கம் கோயிலை பொறுத்தவரை, ‘‘பாஞ்சராத்ர ஆகமம்’ முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், இராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும். சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்படும்.அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும்….

The post ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி : 14-12-2021 appeared first on Dinakaran.

Related Stories: