வைகாசி விசாகத்தை முன்னிட்டு செட்டிகுளம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பாடாலூர், மே 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மலை மீது ஏறுவதற்கு சுமார் 200 படிகள் உள்ளன. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

மேலும் கோயிலின் கிழக்குப் பிரகார மண்டபத்தில் 108 சங்கபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு உகந்த சண்முக ஹோமம் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post வைகாசி விசாகத்தை முன்னிட்டு செட்டிகுளம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: