வேலாயுதம்பாளையம் பகுதியில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு கோலாகலம்

வேலாயுதம்பாளையம், ஜூலை 16: கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோயிலில் ஆனி மாத தேய்பிறை கடைசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோயிலில் உள்ள நந்தி பெருமான், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயிலில் உள்ள நந்தி பெருமான், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோயில்களில் ஆனி மாத தேய்பிறை கடைசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post வேலாயுதம்பாளையம் பகுதியில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: