தான்தோன்றிமலையில் சத்துணவு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

கரூர், ஜூன் 27: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க கரூர் மாவட்டஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்டத்தில்புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் சத்துணவு மையங்களில் எவ்வாறு செயல்படுகிறது கடை பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வருகை பதிவேடு, ஆய்வுகள், சமையலறை சுத்தமாக வைத்திருத்தல், மாணவர்கள் பொது சுகாதாரத்தை காத்திடவும் தங்களின் சுகாதாரத்தை பேணி காத்திட செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் தான்தோன்றி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்புகளை தர வளர்ச்சி அலுவலர் விஜயா லட்சுமி தொடங்கி வைத்தார். பயிற்சி வகுப்புகளில் பயிற்றுநர்கள் மணிமேகலை சின்னச்சாமி ,மகேஸ்வரி, மோகன்ராஜ், செவிலியர் ஜோஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டு கரூர் மற்றும் தாந்தோணி பயிற்சி வழங்கினார் தணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.

The post தான்தோன்றிமலையில் சத்துணவு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: