வேதாரண்யத்தில் தேசிய வாழைப்பழம் தினம் கொண்டாட்டம்

 

வேதாரண்யம்,ஆக.29: வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தேசிய வாழைப்பழ தினம் கொண்டாடப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு வாழை பழங்களை வழங்கி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர். வாழை பழத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியம் வரைந்தனர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஆசிரியர் வசந்தா வழை கன்றுகளை மாணவ மாணவிகளுக்கு பரிசாக வழங்கினார்.

The post வேதாரண்யத்தில் தேசிய வாழைப்பழம் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: